தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் (NWSDB) கொழும்பு நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ மேம்பாட்டு முதலீட்டுத் திட்டத்தின் அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் காரணமாக கொழும்பில் சனிக்கிழமை (22) இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (23) மதியம் 12.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
இதன்படி கொழும்பு 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைப்படும்
பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும், போதுமான தண்ணீரை முன்கூட்டியே சேகரிக்குமாறும் தேசிய நீர் வழங்கல் சபை கேட்டுக் கொண்டுள்ளது.











Discussion about this post