நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நுவரெலியா பிரதான மத்திய சந்தைக்கு அருகில் பயணித்துக் கொன்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
குறித்த முச்சக்கர வண்டி நுவரெலியா கண்டி வீதியிலுள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் பயணித்துக் கொன்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.
இவ்விபத்தானது இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தின் போது முச்சக்கரவண்டியில் சாரதி மற்றும் சாரதியின் மனைவி, பிள்ளை ஒருவரும் இருந்ததாகவும் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டி திடீரென தீ பிடித்த நிலையில் அதனை அணைக்க பலரும் போராடி தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே வாகனம் தீப்பிடித்திருக்கலாம் என ஆரம்பக் கட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகம் தெரிவிக்கப்படுகிற போதிலும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.











Discussion about this post