சர்வதேச தொழில் சந்தைக்கு ஏற்ற வகையில் பயிற்றுவிக்கப்பட்ட மற்றும் கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில் மாகொளவில் நொர்தன் பல்கலைக்கழகம் ஒக்டோபர் 27ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.இந் நிகழ்வில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர. , பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துலிப் விஜேசேகர, அரச அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
பல்கலைக்கழக திறப்பு நிகழ்வை முன்னிட்டு நிறுவுனர் கந்தையா கஜன் அவர்களால் உயர் தரத்திலான முகக் கவசங்கள் தொகுதியொன்று வெளிசரை வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
கிரேட் பிரிட்டனில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைந்து சர்வதேச வேலை சந்தைக்கு தேவையான பல இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளோமா படிப்புகள் இங்கு நடத்தப்படுகின்றன. இந் நிறுவனத்தின் கல்வி பிரிவு தலைவராக கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் என்.என்.ஜே. நவரத்ன பணியாற்றவுள்ளார்.
மேலும், பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நடவடிக்கைகளும் இங்குள்ள கற்கைநெறிகளை பயிலும் மாணவர்களுக்கும் மேற்கொள்ளப்பட உள்ளதாக நிர்வாக சபை தெரிவித்துள்ளது.
Discussion about this post