சீனாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களை கொண்ட 2 விமானங்கள் இன்று (27) இலங்கையை வந்தடையவுள்ளதாக, கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கையின் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் சீனாவினால் அன்பளிப்பாக வழங்கப்படும் குறித்த மருந்துகளின் பெறுமதி 35 மில்லியன் சீன ரிங்கிட் (ரூ. 1.8 பில்லியன்) என தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
அந்த வகையில், கடந்த ஜூன் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் 23 மில்லியன் சீன ரிங்கிட் (ரூ. 1.2 பில்லியன்) பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக, சீனத் தூதகரம் குறிப்பிட்டுள்ளது.
இதில் பின்வரும் மருத்துவ பொருட்கள் உள்ளடங்குவதாக தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
1) 15,000 vials of Human Albumin Solution;
2) 330,300 doses of Rabies Vaccine for Human Use (Vero Cell) Freeze-dried
3) 7,500 vials of 23-Valent Pneumococcal Polysaccharide Vaccine (PPSV23);
4) 22,020 vials of Human Immunoglobulin (ph4) for IV use;
5) 170,240 syringes of Recombinant human granulocyte Colony-Stimulating factor injection.











Discussion about this post