இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டிகளுக்காக இலங்கை “A” அணிக்கு அஞ்சலோ மெத்தியூஸ், குசல் ஜனித் பெரேரா உட்பட பல வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் வகையில் வீரர்கள் “A” அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குசல் ஜனித் பெரேரா, பெத்தும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, சமிக கருணாரத்ன, அஞ்சலோ மெத்தியூஸ், துனித் வெல்லாலகே, சதீர சமரவிக்ரம, லக்ஷான் சந்தகன், விஷ்வ பெர்னாண்டோ, பிரமோத் மதுஷன், நுவன் துஷார, கவிஷ்க அஞ்சுல, அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
