இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முழுமையான கணக்காய்வு செய்யப்பட்டு கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கிடைக்கும் வரை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கமாட்டேன் என விளையாட்டுத்துறை அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.
குசலா சரோஜனி வீரவர்தன அறிக்கையின் அடிப்படையில் கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை பரிசீலித்த போதே விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
