இலங்கை மகளிர் அணிக்கு தீர்மானமிக்க போட்டி இன்று..!

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி பங்கேற்கும் மற்றுமொரு போட்டி இன்று (19) நடைபெறவுள்ளது.

நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஆட்டம் இன்றிரவு 10.30 மணிக்கு தொடங்க உள்ளது.

இலங்கை வீரர்கள் பங்கேற்ற மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற முடிந்தது.

இதற்கமைய, அவுஸ்திரேலிய மகளிர் அணி முதல் குழுவில் முன்னிலை வகிக்க, இலங்கை மகளிர் அணி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

இதேவேளை, இரண்டாவது பிரிவின் கீழ் பாகிஸ்தான் மகளிர் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கும் இடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

Exit mobile version