வெளிநாட்டில் விமர்சனம்-ராகுலுக்காக வரிந்து கட்டிய முரசொலி- பிரதமர் மோடி கண்ணாடியை பார்க்க அட்வைஸ்!

மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வெளிநாட்டு பேச்சுகளுக்காக அவரை விமர்சிக்கும் பிரதமர் மோடி முதலில் கண்ணாடியில் தம்மை பார்க்க வேண்டும் என காட்டமாக சாடியுள்ளது திமுகவின் முரசொலி நாளேடு.

முரசொலியில் இன்று எழுதப்பட்ட தலையங்கம்: நாடா­ளு­மன்­றத்­தில் அமளி செய்து கொண்டு இருக்­கி­றது ஆளும்­கட்­சி­யான பா.ஜ.க. ‘எதிர்க்­கட்­சி­கள் என்ன முடக்­கு­வது? இதோ நாங்­களே அதைச் செய்து கொள்­கி­றோம்’ என்று கூச்­சல் செய்து கொண்டு இருக்­கி­றது பா.ஜ.க. எதிர்க்­கட்­சி­க­ளைப் பேச விட்­டால் அவர்­கள் அதா­னியை நினை­வூட்­டிக் கொண்டே இருக்­கி­றார்­கள். அதா­னியை நினை­வூட்­டி­னால் அதற்கு மோடி பதில் சொல்­லி­யாக வேண்­டும். அதானி விவ­கா­ரத்­தைத் திசை திருப்­பு­வ­தற்­காக பா.ஜ.க. கண்­டு­பி­டித்த வழி­தான், லண்­ட­னில் ‘ராகுல் பேசி­யது தவறு’ என்­பது ஆகும்.

‘வெளி­நாட்­டில் போய் இந்­தி­யா­வைப் பற்றி பேசக் கூடாது. ராகுல் பேசி­யது தவறு’ என்று பா.ஜ.க. சொல்­கி­றது. இவ்­வ­ளவு நியா­ய­வான்­கள், இந்­திய நாடா­ளு­மன்­றத்­தில் ராகுல் பேசி­யதை அனு­ம­தித்­தார்­களா என்­றால் இல்லை. நாடா­ளு­மன்­றத்­தில் அதா­னிக்­கும் மோடிக்­கும் உள்ள தொடர்­பு­கள் குறித்து பக்­கம் பக்­க­மா­கப் பேசி­னார் ராகுல். வெளி­நாட்­டுக்கு எப்­போ­தெல்­லாம் பிர­த­மர் போகி­றாரோ அப்­போ­தெல்­லாம் அந்­தந்த நாட்­டு­டன் வர்த்­த­கத் தொடர்பு அதா­னிக்கு அதி­கம் ஆகி­றதே அது எப்­படி என்று ராகுல் கேட்­டார். தேதி வாரி­யா­கக் கேட்­டார். மோடி­யின் பய­ணத் திட்­டத்­தை­யும் — அதா­னி­யின் வர்த்­த­கப் பெருக்­கத்­தை­யும் ஆதா­ரங்­க­ளு­டன் வைத்­துக் கொண்டு கேட்­டார். இவை அனைத்­தும் நாடா­ளு­மன்­றக் குறிப்­பு­க­ளில் இருந்து நீக்­கப்­பட்­டன. மக்­க­ள­வை­யில் ராகுல் பேச்­சின் முக்­கி­யப் பகு­தி­க­ளும், மாநி­லங்­க­ள­வை­யில் மல்­லி­கார்­ஜுன கார்கே பேச்­சின் முக்­கி­யப் பகு­தி­க­ளும் நீக்­கப்­பட்­டன. இந்­திய நாடாளு மன்­றத்­தில் பேச அனு­ம­திக்­காத இவர்­கள்­தான் ‘லண்­ட­னில் எப்­படி பேச­லாம்?’ என்று கேட்­கி­றார்­கள்.

Exit mobile version