முதலிரவில் தொட்டு கூட பார்க்கலயாம்.. பெற்றோரிடம் சொன்ன புதுப்பெண்.. கோபத்தில் வெட்டிக் கொன்ற கணவன்

முதலிரவில் தாம்பத்யம் எதுவும் நடக்காததை வெளியே சொன்னதால் புதுப்பெண்ணை கணவன் தனது தந்தையுடன் சேர்ந்து கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.

முதலிரவில் தாம்பத்யம் எதுவும் நடக்காததை வெளியே சொன்னதால் புதுப்பெண்ணையும், மாமியாரையும் வங்கி ஊழியரான கணவன் தனது தந்தையுடன் சேர்ந்து கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். ஆந்திர மாநிலம் சிந்துலாவில் நடைபெற்ற இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் சிந்துல என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தை சேர்ந்த பி டெக் பட்டதாரியான சரவணன் என்பவர் ஐதராபாத்தில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் தெலுங்கான மாநிலம் வனபாத்தியை சேர்ந்த 20 வயது பெண் ஒருவருக்கும் கடந்த 1 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. தடல் புடலாக நடந்த இந்த திருமணத்தில் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

முதலிரவு நடக்கவில்லையாம் திருமணத்தன்று இரவில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இல்லற வாழ்க்கையை தொடங்க பெரும் கனவுகளுடன் சென்ற புதுபெண்ணுக்கு முதல் இரவிலேயே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. மாப்பிள்ளை சரவணன் முதலிரவில் தாம்பத்யத்தில் ஈடுபாடு காட்டவில்லை. இதனால், அன்று முதலிரவு நடக்கவில்லையாம். முதல் நாள் என்பதால் இதை பெண்ணும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

ஊர் முழுக்க பரவிவிட்டது ஆனால், அடுத்தடுத்த நாட்களிலும் சரவணன் தாம்பத்யத்தில் ஆர்வம் காட்டாமல் இருந்துள்ளார். இதனால், புதுப்பெண் பெரும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளார். தனது பெற்றோரிடமும் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார். இதை கேட்டு பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதற்குள் இந்த தகவல் ஊர் முழுக்க பரவிவிட்டது. இதனால், சரவணனை பலரும் கேலி செய்யும் வகையில் பேசியிருக்கிறார்கள். சரவணனை ஐதரபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஆண்மை பரிசோதனையும் செய்து இருக்கிறார்கள்.

மனைவிக்கு கத்தியால் வெட்டு இந்த தகவல்கள் சரவணனின் பெற்றோருக்கு தெரிந்ததும் கோபம் அடைந்துள்ளனர். தனது மகனை அவமானப்படுத்தி விட்டதாக கருதிய சரவணன் பெற்றோர்.. மருமகளின் குடும்பத்தினரை தீர்த்து கட்ட திட்டமிட்டுள்ளனர். ராவணன் சொந்த ஊரான சிந்துல நகருக்கு மனைவியை அழைத்து வந்திருக்கிறார். புதுப்பெண்ணுடன் அவரது தந்தை மற்றும் தாயாரும் வருகை தந்துள்ளனர். வீட்டிற்கு சென்றதும் தனது மனைவியை சரவணன் கத்தியால் வெட்டியிருக்கிறார்.

மாமியாரும் வெட்டி கொலை இதில் ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே இறந்து விட்டார். மற்றொரு அறையில் இருந்த புதுப்பெண்ணின் தந்தையான வெங்கடேஸ்வரலு, தாயார் ரமாதேவி ஆகியோரை சரவணனின் தந்தை பிரசாத் கத்தியால் வெட்டியிருக்கிறார். வெங்கடேஸ்வரலு ரத்தக்காயங்களுடன் வீட்டில் இருந்து தப்பினார். ஆனால், புதுப்பெண்ணின் தாயான ரமாதேவி பிரசாத் வெட்டி கொலை செய்யப்பட்டார். புதுப்பெண் மற்றும் அவரது தாயாரை மாப்பிள்ளை வீட்டினர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தந்தை மகன் கைது இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போலீசார் வெங்கடேஸ்வரலுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் ருக்மணி, ரமாதேவி உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன் மற்றும் அவரது தந்தை பிரசாத் ஆகியோரை கைது செய்து செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. முதலிரவு நடக்காததை வெளியில் கூறி அவமானப்படுத்திவிட்டதாகக் கூறி புதுப்பெண் மற்றும் அவரது தாயாரை சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை செய்ய திட்டமிட்டு, வீட்டிற்கு அழைத்து வந்த சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Exit mobile version