பிக்பாஸ் மூலம் பிரபலமான அமீர், பாவனி ஜோடி இணைந்து நடிக்கவுள்ள புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் ஐந்தாவதில் ராஜு ஜெயமோகன், பிரியங்கா, இசைவாணி, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, அபிநய், சின்ன பொண்ணு, நாடியா சிங், வருண், இமான் அண்ணாச்சி, ஸ்ருதி, அக்ஷரா, சிபி சந்திரன், நிரூப், ஐக்கி பெர்ரி மற்றும் அமீர், பாவனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து காதல் ஜோடிகளாக வலம் வருகின்றனர் அமீரும், பாவனியும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமயத்தில் சர்ச்சைகளுக்கு, பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வலம் வந்தார் பாவனி. பிக்பாஸில் இறுதிவரை பயணித்த இவர் மூன்றாம் இடத்தையும் பிடித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அமீர், பவானி இருவரும் ஜாலியாக ஒன்றாக ஊர் சுற்றினார்கள். இவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகின. ஆரம்பத்தில் அமீர் ஒருதலையாக பவானியை காதலித்து வந்த நிலையில், தற்போது இருவரும் காதலித்து வருகின்றனர். இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் இணையத்தில் அவ்வப்போது செய்திகள் பரவி வருகிறது.
இந்நிலையில் அமீரும், பாவனியும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர். இந்தப்படத்தை அமீரே இயக்கவுள்ளார். ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகும் இந்தப்படத்தில் மன்சூர் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இன்றைய 2கே கிட்ஸ் காதலை பிரதிபலிக்கும் வகையில் இந்தப்படம் உருவாகவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நடன இயக்குனரான அமீர் தற்போது இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அமீரும், பாவனியும் ஏற்கனவே அஜித்துடன் இணைந்து ‘துணிவு’ படத்தில் நடித்துள்ளனர். மேலும், அமீரும் பாவனியும் தங்களது துறைகளில் சாதித்துவிட்டு ஒருவருடம் கழித்து திருமணம் செய்துக்கொள்ளவுள்ளதாக அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
