யூரியா உரத்தின் விலை மேலும் குறைக்கப்படும் !!

இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் யூரியாவின் விலை வீழ்ச்சி காரணமாக யூரியா உரத்தின் விலை மேலும் குறைக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜூன் முதல் வாரத்தில் 31,200 மெட்ரிக் டன் யூரியா உரம் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் இவை சந்தைக்கு வெளியிடப்படும் போது யூரியா உரத்தின் விலை மேலும் குறைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு யூரியா உரம் கையிருப்புகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

அரை ஹெக்டேருக்கு குறைவாக நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு ஒரு மூட்டை யூரியா உரம் இலவசமாக வழங்கும் திட்டம் இதுவரை ஏழு மாவட்டங்களில் செயற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சும் தெரிவித்துள்ளது.

Exit mobile version