ஒரு நாள் போட்டியில் களமிறங்கும் மதீஷ..!

3 போட்டிகள் கொண்ட ஆப்கானிஸ்தான் – இலங்கை ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஒரு நாள் போட்டி இன்று (02) சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய போட்டியில் மதீஷ பத்திரனவுக்கு ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

மூன்று போட்டிகளும் சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் பகல் போட்டிகளாக நடைபெறவுள்ளது.

அதன்படி இன்று காலை 10 மணிக்கு முதல் ஒரு நாள் போட்டி தொடங்க உள்ளது.

இப்போட்டியில் இணையும் இலங்கை அணி இன்று மகிந்த ராஜபக்ச மைதானத்தில் தமது கடைசி பயிற்சியில் இணைந்ததுடன் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் மஹேல ஜயவர்தனவும் அதில் இணைந்துகொண்டார்.

இன்றைய போட்டியில் காயமடைந்த வனிந்துவுக்குப் பதிலாக துஷான் ஹேமந்த விளையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version