லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை பட்டியல்

newsinfirst-Litro-Gas

newsinfirst-Litro-Gas

லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயு விலையை குறைத்துள்ளது.

இதன்படி, இன்று (04) நள்ளிரவு முதல் விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12.5 KG எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 KG எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,186 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5KG எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 181 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலையாக 1,281 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2.3KG எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 83 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலையாக 598 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version