கொம்பனி தெரு பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் தொகுதியின் 8வது மாடியில் இருந்து வீழ்ந்து சீன பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொம்பனி தெரு பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கட்டிடத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்த 24 வயதான சீன இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (4) மாலை 5.00 மணியளவில் கட்டடத்தின் நிர்மாணப் பணிகளை அவதானித்துக் கொண்டிருந்த வேளையில் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




Discussion about this post