இலங்கை வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

Coronavirus economic impact concept image

கொரோனா தொற்று போன்ற அறிகுறிகளுடன் குழந்தைகள், முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படும் வைரஸ் தொற்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொற்றுக்கு இதுவரை தடுப்பூசிகள் அல்லது வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பரவிவுள்ள இந்த அதிகம் அறியப்படாத சுவாச வைரஸின் அண்மைய அதிகரிப்பு குறித்து இலங்கை சுகாதார அதிகாரிகளும் விழிப்புணர்வை அறிவித்துள்ளனர்.

இது குறித்து இலங்கை சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கையில்,

தாம் இந்த வைரஸின் புதிய வளர்ச்சிகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவிற்கு வெளியே இது ஆபத்தான கட்டத்தை எட்டவில்லை என்றாலும், எல்லைகளுக்கு அப்பால் அது பரவும் வாய்ப்பை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

ஹியூமன் மெட்டாப் நியூமோ வைரஸ் தொற்று முதன்மையாக மேல் சுவாசக் குழாயைப் பாதிக்கிறது. 2001, ஆம் ஆண்டு இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.

இந்த வைரஸ் சளி, காய்ச்சல் தொண்டைப்புண் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா தொற்று அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

பொதுவாக, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று சுகாதாரத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வைரஸ், இருமல், தும்மல், தொடுதல் போன்ற நெருங்கிய தனிப்பட்ட தொடர்பு மூலம் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து ஏனையவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது.

கைகுலுக்கல், வைரஸ் உள்ள பொருட்கள் அல்லது அதன் பரப்புகளைத் தொடுதல் என்பவற்றாலும் இந்த நோய் பரவும் ஆபத்து உள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version