விமானப் படை வீரர் ஒருவர் தற்கொலை..!

பம்பலப்பிட்டியில் விமானப்படை வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருகோணமலை அபேபுர பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய விமானப்படை சார்ஜன்ட் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மேலும் பல சிப்பாய்களுடன் இணைந்து கடமையில் இந்த போது பம்பலப்பிட்டி, பொன்சேகா பிளேஸில் அமைந்துள்ள பாழடைந்த வீடொன்றுக்கு அருகாமையில் குறித்த சார்ஜன்ட் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version