பரீட்சை நிலையத்தில் மோதிக்கொண்ட மாணவர்கள்

கடுகஸ்தோட்டை பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் இம்முறை பரீட்சைக்குத் தோற்றியுள்ள இரு மாணவ குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் குறித்த காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சகர் நிஹால் தல்துவ வெளியிட்டுள்ள குரல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

கடுகஸ்தோட்டை பகுதியில் உள்ள பாடசாலையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தற்போது இடம்பெற்று வரும் கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களே மேற்படி மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மோதல் சம்பவத்தின் போது மாணவர்கள் கடும் தூசன வார்த்தைகள் பயன்படுத்தி மோதிக்கொண்டனர்.

தற்போது பரீட்சை இடம்பெற்று வருவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது பரீட்சைகள் முடிவுள்ள பின்னர் இது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Exit mobile version