மரக்கறி விலையில் பாரிய வீழ்ச்சி

நாடளாவிய ரீதியில் மரக்கறி விலைகள் அதிகரித்து வரும் அதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலைகள் குறைவடைந்துள்ளதாக பொருளாதார நிலைய வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த மரக்கறிகளின் மொத்த விலை தற்போது கணிசமான அளவில் குறைந்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும் மரக்கறிகள் விற்பனையும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கடந்த நாட்களில் 350 முதல் 400 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கத்தரிக்காய் இன்று (07) 150 ரூபாவாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மலையகப் பகுதிகளில் இருந்து வரும் மரக்கறிகளின் விலையும் 100 ரூபா முதல் 200 ரூபா வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version