மட்டக்களப்பில் உணவு நஞ்சானதில் ஒருவர் உயிரிழப்பு

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாங்காடு பிரதேசத்தில் சமைத்து உண்ட உணவு நஞ்சாகியதில் 27 வயது யுவதி வியாழக்கிழமை (8) உயிரிழந்ததுடன் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

மாங்காட்டு பிரதேசத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 27 வயதுடைய உயேந்தினி என்பவரே இல்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்து பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் சம்பவதினமான இன்று மதிய உணவினை உண்ட பின்னர் சுமார் 2 மணியளவில் இதில் உயிரிழந்த பெண் மற்றும் அவரது 4 மற்றும் 7 வயது இரு குழந்தைகள் அவரது தாயார் உட்பட 4 பேர் வாந்தியெடுத்த நிலையில் மயங்கியதையடுத்து அவர்களை கஞவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் 27 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய மூவரும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசர் மேற்கொண்டுவருகின்றனர்.

Exit mobile version