காலி, ஹபராதுவ, தல்பே கடலில் நீராடச் சென்று அலையில் அள்ளுண்டு காணாமல் போன 6 மாணவர்களில் அவர்களில் ஐந்து பேரை பிரதேச மக்களுடன் இணைந்து மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும் ஒரு மாணவர் மாத்திரம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குருநாகல் – பொத்துஹெர பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவர் ஒருவரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குருநாகல் பிரதேசத்தில் உள்ள தனியார் வகுப்பு ஒன்றின் ஏற்பாட்டில் சுற்றுலா சென்றிருந்த மாணவர்கள் குழு ஒன்றே நேற்று மாலை தல்பே கடற்கரை பகுதியில் இந்த அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
