வானிலையில் ஏற்பட்ட மாற்றம்..!

நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மேகமூட்டத்துடன் காணப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வடக்கு, கிழக்கு, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களின் சில இடங்களில், மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருகோணமலை, பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version