இரண்டு பஸ்கள் நேருக்கு நேராக மோதி விபத்து

தியத்தலாவையில் இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில், பாடசாலை மாணவர்கள் ஐவர் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர். நேற்றுக் (16) காலை தியத்தலாவை, காஹகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னாரிலிருந்து தியத்தலாவை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் மற்றும் பொரளந்தையிலிருந்து பாடசாலை மாணவர்களுடன் பண்டாரவளை நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

விபத்தில் பாடசாலை மாணவர்கள் ஐவர் மற்றும் பாடசாலை பஸ்ஸின் சாரதி ஆகியோர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர். சம்பவம் தொடர்பாக தியத்தலாவை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version