மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான பஸ்

பாணந்துறை – நுகேகொட பாதையில் பயணித்த பஸ் ஒன்று மொரட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள பஸ் நிலையத்தின் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்து நிலையம் பலத்த சேதம் அடைந்ததுடன், பஸ்ஸின் சாரதி மற்றும் பஸ் நிலையத்தில் இருந்த பெண் ஒருவரும் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version