அடுத்த ஜனாதிபதியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே தீர்மானிக்கும் என்கின்றார் சாகர காரியவசம்

நாட்டின் அடுத்த ஜனாதிபதியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே தீர்மானிக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அதன்பிரகாரம் அடுத்த நாடாளுமன்றிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் என்றும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் அநுரகுமார திஸாநாயக்கவின் கட்சி, நாட்டில் மீண்டும் வன்முறையான கலாசரத்தை நாட்டில் ஏற்படுத்தவே கடந்த காலங்களில் செயற்பட்டது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

தங்களின் கருத்துக்கு இணங்காத நபர்கள் மீது தாக்குதல் நடத்து நடுவீதியில் வைத்து கொலை செய்து மோசமான கலாசாரத்தை ஏற்படுத்த முற்பட்டார்கள் என்றும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும் தமது கட்சியின் உறுப்பினர்கள் மீது இனிமேலும் தாக்குதல் நடத்த இடமளிக்க போவதில்லை என்றும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version