நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.

எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானமான ஈ.கே.650 இல் டுபாயில் இருந்து இன்று காலை 09.10 மணியளவில் ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 17ஆம் திகதி ஜனாதிபதி நாட்டில் இருந்து புறப்பட்டுமுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version