விஜயகலா மகேஸ்வரன் படுகாயம்

யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் வாகன விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த அவர் புத்தளம் வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர் பயணித்த வாகனம் மரமொன்றின்மீது மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version