காவல்துறை அதிகாரிகள் என தங்களை அடையாளப்படுத்தி முச்சக்கர வண்டியொன்றில் இளைஞன் ஒருவரை கடத்தி சென்றதாக கூறப்படும் இராணுவ சிப்பாய் ஒருவர் உட்பட மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
23 வயதான குறித்த இளைஞன் கொஸ்கொட பகுதியில் வைத்து காப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் கடந்த தினம், புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை ஊடாக நடந்துசென்ற போது கோட்டை தொடருந்து நிலையத்துக்கு அருகில் வைத்து முச்சக்கரவண்டியில் பிரவேசித்த இருவர் தங்களை காவல்துறை அதிகாரிகள் என அடையாளப்படுத்தி உள்ளனர்.
இதையடுத்து, அந்த இளைஞனை முச்சக்கரவண்டிக்குள் பலவந்தமாக ஏற்றிச் சென்றுள்ளனர்.
போதைப்பொருள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக காவல்நிலையத்திற்கு அழைத்து செல்வதாக அவர்கள் குறித்த இளைஞனிடம் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறிருப்பினும், புறக்கோட்டை பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை குழுவொன்று குறித்த முச்சக்கரவண்டியை சந்தேகத்தின் அடிப்படையில் பின்தொடர்ந்த போது மடக்கிப் பிடித்துள்ளனர்.
எவ்வாறிருப்பினும், இந்த சம்பவத்துக்கான காரணம் உடனடியாக தெரியவராத நிலையில் காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
