ஊழியர் சேமலாப நிதியில் கை வைக்கப் போவதில்லை என்றும் ஆகக் குறைந்தபட்ச 9 வீத வட்டி அதற்காக உறுதிப்படுத்தப்படும் என்றும், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். தேசிய கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் ஊழியர் சேமலாப நிதிக்கு எந்தவித பாதிப்பும் இடம்பெறாது என்றும் அவர் கூறினார்.
தேசிய கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது, ஊழியர் சேமலாப நிதியமும் மறுசீரமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு வரும் தகவல்களை மறுத்த மத்திய வங்கியின் ஆளுநர், அது தொடர்பாக தெளிவுபடுத்திய போதே இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஜனாதிபதி ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
“ஊழியர் சேமலாப நிதி வைப்புக்காக வழங்கப்பட்டு வரும் 9 வீத வட்டிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் குறைந்தபட்சம் ஒன்பது வீத வட்டி உறுதிப்படுத்தப்படும் என்றும், அவர் மேலும் தெரிவித்தார்.
