விஜய்யின் நடிப்பில் லோகேஷின் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து இப்படத்தில் பிரபல நடிகை மடோனா செபாஸ்டியன் முக்கியமான ரோலில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தை பற்றி தான் கோலிவுட் வட்டாரமே பேசி வருகின்றது. கோலிவுட் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகையே லியோ திரைப்படம் எதிர்பார்க்க வைத்துள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணி தான்.
ஏற்கனவே மாஸ்டர் என்ற வெற்றி படத்தின் மூலம் வெற்றிக்கூட்டணியாக வலம் வரும் விஜய் மற்றும் லோகேஷ் லியோ மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இந்நிலையில் விக்ரம் படத்தின் மூலம் ஒரு இயக்குனராக இந்தியளவில் பிரபலமான லோகேஷ் விஜய்யை லியோ படத்தில் தன் ஸ்டைலில் இயக்கி வருகின்றார்.
இதுதான் இப்படத்திற்கான மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. மாஸ்டர் படத்தில் விஜய்க்காக சில கமர்ஷியல் விஷயங்களை சேர்த்திருந்த லோகேஷ் இம்முறை முழுக்க முழுக்க லியோ படத்தை தன் ஸ்டைலில் இயக்கி வருகின்றார். எனவே லியோ மூலம் நாம் வேறொரு விஜய்யை பார்க்கலாம் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் விக்ரம் படத்தில் லோகேஷ் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தை உருவாகி அதில் சூர்யாவை நடிக்க வைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். வெறும் ஐந்தே நிமிடங்கள் தான் சூர்யா விக்ரம் படத்தில் நடித்தார் என்றாலும் அந்த கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் நிலையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதைப்போல லியோ படத்திலும் பல சுவாரஸ்யமான ட்விஸ்ட்களை லோகேஷ் வைப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட்டாக லியோ படத்தில் பிரபல நடிகை மடோனா செபாஸ்டியன் இணைந்துள்ளார். இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் மடோனா ஒரு சிறிய ரோலில் தான் நடித்திருப்பார் என நினைத்துகொண்டுருந்த நிலையில் அவர்களின் கணிப்பு தற்போது பொய்யாகியுள்ளது.
