மின்சாரம் தாக்கி தம்பதியினர் பரிதாபமாக பலி..!

மின்சாரம் தாக்கிக் கணவனும் மனைவியும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் கொழும்பு, கொலன்னாவையில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுக்கை அறையில் பழுதடைந்த மின்விசிறியைத் திருத்தும்போதே இருவரும் மின்சாரம் தாக்கி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த தம்பதியினர்
71, 68 வயதுடைய வயோதிபதித் தம்பதியினரே இதன்போது உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு வீட்டுப் பணிப்பெண் தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சடலங்களை மீட்டு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர்.

வீட்டுப் பணிப்பெண்ணிடம் வாக்குமூலத்தைப் பெற்ற பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version