கோழி இறைச்சி விலை குறைப்பு..!

கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கோழி இறைச்சி ஒரு கிலோகிராம் 200 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கோழி இறைச்சி ஒரு கிலோகிராம் 1,450 ரூபா வரையில் குறைவடைந்துள்ளதாக அச் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

கால்நடைகளுக்கான தீவனங்களின் விலைகள் குறைவடைந்துள்ளமையால் கோழி இறைச்சியின் விலையும் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version