பேரூந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு : 8 பேர் காயம் !

எல்ல – வெல்லவாய வீதியின் ரஹதன்கந்த பகுதியில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை குறித்த பேரூந்து பள்ளமொன்றில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியதோடு விபத்தில் காயமடைந்த மேலும் 8 பேர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Exit mobile version