குழந்தைகளுக்கான தடுப்பூசி தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

monkeyfox-newsinfirst

குழந்தைகளுக்கான தடுப்பூசி பெற்றுக் கொடுக்க அஞ்ச வேண்டாம் என கொழும்பு லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலையின் நிபுணத்துவ மருத்துவர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசி வகைகளை ஏற்றுக் கொள்ளாமை பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக தடுப்பூசிகளை முறையாக பெற்றுக்கொள்ளாது 20 குழந்தைகளுக்கு அம்மை நோய் பரவியுள்ளதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அம்மை, போலியோ, உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தடுப்பூசி பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானது என தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version