இலங்கையில் வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் காட்டு யானைகள் தாக்கி மூவர் மரணமடைந்துள்ளனர்.
மொனராகலை, பொலனறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் குறித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மொனராகலை – மெதகமை பகுதியில் (28.07.2023) பிற்பகல் காட்டு யானை தாக்கி 58 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வயல் வேலைக்குச் சென்றபோது யானையின் தாக்குதலுக்கு இலக்கானார் என்று பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் மெதகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், பொலனறுவை – மெதிரிகிரிய புதிய நகரத்தில் காட்டு யானை தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
(28.07.2023) அதிகாலை வீட்டின் வந்த 72 வயதான நபரை யானை தாக்கியது என்று பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் மெதிரிகிரிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, அநுராதபுரம் – மஹவ பகுதியில் காட்டு யானை தாக்கி 43 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதிக்குள் (28.07.2023) அதிகாலை நுழைந்த யானையை விரட்டுவதற்கு முற்பட்டபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் மஹவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
