LPL போட்டி : முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி

லங்கா பிரீமியர் லீக்கின் ஆரம்ப போட்டி ரசிகர்களின் பெரும் எதிர்பபார்ப்புக்கு மத்தியில் இன்று கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.

தொடரின் ஆரம்ப போட்டியில் லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணியும் கொழும்பு ஸ்டைக்கேர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள கொழும்பு ஸ்டைக்கேர்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

கொழும்பு அணியில் பாபர் அசம், பெத்தும் நிஸ்ஸங்க, டிக்வெல்ல, நுவனிது பெர்னாண்டோ, யசோதா லங்கா, சாமிக்க கருணாரத்ன, ரமேஷ் மெண்டிஸ், மொஹமட் நவாஸ், நசீம் ஷா, மதீஷ பத்திரன, லக்ஷன் சந்தகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஜப்னா கிங்ஸ் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ், நிஷான் மதுஷ்க, சரித் அசலங்க, பிரியமல் பெரேரா, தௌஹித் ஹிரிடோய், துனித் வெல்லாலகே, திசர பெரேரா, மகேஷ் தீக்ஷன, வியாஸ்காந்த், டில்ஷான் மதுஷங்க, ஹர்துஸ் வில்ஜோன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Exit mobile version