பல பகுதிகளுக்கு 15 மணி நேர நீர் வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் (09) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக 9 ஆம் திகதி காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.
நீர் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் வருமாறு
அளுத்கம, மத்துகம, அகலவத்த, வாதுவ, பொத்துப்பிட்டி, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, கட்டுகுருந்த , நாகொட,
பயாகல, மகோனா, தர்காநகர், பிலமினாவத்த, மொரகல்ல
Exit mobile version