இனிமேல் கொழும்பிற்கு நடத்துனர்கள் இல்லாத பஸ்கள் .. இலத்திரனியல் அட்டை மூலம் மட்டுமே அதில் பயணம் செய்ய முடியும்

கொழும்பிற்குள் சேவையில், ஈடுபடுத்துவதற்காக இன்னும் 3 மாதங்களுக்குள் நடத்துனர்கள் இல்லாத பஸ்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, இவ்வாறு தெரிவித்தார்.

இலத்திரனியல் அட்டை மூலம் மட்டுமே அதில் பயணம் செய்ய முடியும் என்றும், இந்த பஸ்களை இயக்குவதன் மூலம் கொழும்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version