கொழும்பின் பல பகுதிகளுக்கு சனிக்கிழமை காலை 8 மணி முதல் 18 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
👉கொழும்பு,
👉தெஹிவளை-கல்கிசை,
👉ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மற்றும் கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள்,
👉மஹரகம,
👉பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள்,
👉கொட்டிகாவத்தை ௭ முல்லேரியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகள்,
👉இரத்மலானை மற்றும் கட்டுபெத்த
ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என நீர்வள சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
