நான்கு புதிய பதில் அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு (21) சிங்கப்பூர் செல்லவுள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட நான்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, பிரமித பண்டார தென்னகோன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராகவும், ஷெஹான் சேமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகளுக்கான பதில் அமைச்சராகவும், கனக ஹேரத், தொழில்நுட்ப அமைச்சராகவும், அனுப பெஸ்குவால், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version