என்ன மறுபடியுமா.?: ‘எஸ்டிஆர் 48’ படம் குறித்து வெளியான சூப்பரான தகவல்: தரமான சம்பவம்.!

சிம்புவும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் ஆறாவது முறையாக ஒரு படத்தில் இணையவுள்ளது தான் சோஷியல் மீடியா முழுக்க ஒரே பேச்சாக உள்ளது.

நடிகர் சிம்பு தன்னுடைய தரமான கம்பேக்கிற்கு பிறகு ஒவ்வொரு படங்களையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி அவர் செலக்ட் பண்ணியுள்ள ஸ்கிரிப்ட் தான் ‘எஸ்டிஆர் 48’. உலக நாயகனின் கமல் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது இந்தப்படம். இந்நிலையில் ‘எஸ்டிஆர் 48’ படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகபல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


நடிகர் சிம்புவின் போதாத காலம் என்பது ‘மாநாடு’ படத்தோடு நின்றுவிட்டது. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி ஹிட்டடித்த இந்தப்படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார் சிம்பு. வசூலில் பட்டையை கிளப்பிய இந்தப்படத்தை தொடர்ந்து தனது ஆஸ்தான இயக்குனர் கெளதம் மேனனுடன் மூன்றாவது முறையாக இணைந்தார் சிம்பு.

இந்த கூட்டணியின் மூன்றாவது படைப்பாக ‘வெந்து தணிந்தது காடு’ படம் வெளியானது. இந்தப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப்படத்திற்காக தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து சின்ன பையன் லுக்கிற்கு எல்லாம் மாறி மிரட்டினார். இந்த தொடர் வெற்றியை தொடர்ந்து கன்னட முப்தி படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பத்து தல’ படத்திலும் நடித்தார் சிம்பு.

இந்தப்படம் மூலம் ஹாட்ரிக் ஹிட்டடித்தர். இதனையடுத்து எந்தப்படத்திலும் கமிட் ஆகாமல் இருந்த சிம்பு உலக நாயகனின் கமல் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமானார். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்டிஆர் 48’ படமாக உருவாகயிருந்த இந்தப்படத்தின் ஷுட்டிங் விரைவில் துவங்க இருக்கிறது. தேசிங்கு பெரியசாமி ஏற்கனவே துலக்ர் சல்மான் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தினை இயக்கியிருந்தவர்.

இதனையடுத்து தற்போது சிம்புவை இயக்கவுள்ளார். இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக இந்தப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசயமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, செக்க சிவந்த வானம், வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது ஆறாவது முறையாக சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி ‘எஸ்டிஆர் 48’ படத்தில் இணையவுள்ளனர்.

ஏறக்குறைய இந்த தகவல் கன்பார்ம் ஆகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சிம்பு இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ள இந்தப்படத்தில் வரலாற்று சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் பெரும் பட்ஜெட்டில் உருவாகவுள்ள ‘எஸ்டிஆர் 48’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version