நுரைச்சோலை, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்துக்காக சீன பொறியிலாளர்களை சேவைக்கு இணைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் ஆவணம் போலியானது என்றும் அடிப்படையற்றது என்றும் மின்சார சபை அறிவித்துள்ளது.
தற்போது மின்சார சபையில் நிலவும் மனிதவள பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக தேசிய பொறியிலாளர்களை இணைத்துக்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட நேர்காணலில் தகைமைப் பெற்ற பொறியிலாளர்களை இணைத்துக்கொள்வதற்கு தேவையான நடைமுறை செயற்பாடுகள் இடம்பெற்று வருவதுடன் நேர்காணலுக்காக முன்னிலையாக 400 பேரில் 19 பேரை தெரிவு செய்து சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கு தேவையான அனுமதியைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளாா்.
மேலும், லக்விஜய மின் உற்பத்தி நிலையத்துக்கு சீன பொறியிலாளர்களை இணைத்துக்கொள்ளவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் போலியானவை என்பதுடன் பதவி வெற்றிடங்களுக்காக தேசிய பொறியலாளர்களை சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளாா்.
அதேபோன்று, வெளிநாட்டு பொறியிலாளர்களை இணைத்துக்கொள்வதற்காக அமைச்சோ அல்லது மின்சார சபையோ எவ்வித கொள்கை அடிப்படையிலான தீர்மானமோ அல்லது அனுமதியையோ பெற்றுக்கொள்ளவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
