ஐக்கிய தேசியக் கட்சியின் சகல அமைப்பாளர்களும் கலந்து கொள்ளும் முக்கிய கூட்டம், இன்றைய தினம் கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தவில் இன்று (12) நடைபெறும்
இந்த அவசர கூட்டத்தில், அமைப்பாளர்கள் சகலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரை யின் பேரிலேயே இக்கூட்டம் நடத்தப்படுவதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான கருத்துக்கள் மற்றும் யோசனைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
