தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும்

2023 ஒக்டோபர்04ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு

2023 ஒக்டோபர் 04ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

‼️ பலரும் பலன் பெற தகவல்களை Forward செய்து….. தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்…‼️

இது போன்ற செய்திகளை அறிய எமது வாட்ஸ்அப் செனலில் இணையுங்கள் 👇

https://whatsapp.com/channel/0029Va9HyTi9RZAQgLiSlm3f

Exit mobile version