யூடியூபர் டி.டி.எப். வாசன் கடந்த மாதம் 19ஆம் திகதி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதையடுத்து, டி.டி.எப். வாசன் பிணை கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, டிடிஎப் வாசன் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே வைக்க உத்தரவிட்டு, பிணை மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும், கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, யூடிப் தளத்தை மூடிவிட்டு பைக்கை எரித்து விடும்படியும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக மோட்டார்சைக்கிளை ஓட்டி விபத்து ஏற்படுத்திய யூடியூர் டி.டி.எப்.வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டி.டி.எப். வாசனின் ஓட்டுநர் உரிமம் இன்று முதல் 2033 ஒக்டோபர் 5ஆம் திகதிவரை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
