‘டிக் டோக்’ வீடியோ எடுப்பதற்காக படகில் சென்ற இரு மாணவர்கள் படகு கவிழ்ந்து உயிரிழப்பு.

மட்டக்களப்பு நாவலடி தடாகத்தில் இன்று (08.10) ஆறு மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவர்கள் ‘டிக் டோக்’ வீடியோ எடுப்பதற்காக நாவலடி தடாகத்தில் படகு சவாரி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

18 மற்றும் 19 வயதுடைய இரு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில், அவர்கள் மட்டக்களப்பு சீலாமணன் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Exit mobile version