2023 ஒக்டோபர் 10ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2023 ஒக்டோபர் 10ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஊவா, மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில்சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
தென்மாகாணத்தின்கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
