கொழும்பு கல்வி வலயத்தில் பாடசாலை மாணவர்களிடையே கண் நோய் வேகமாக பரவி வருவதாக வலயக் கல்வி அலுவலகம் எச்சரித்துள்ளது.
கண் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்தால், உடனடியாக பாடசாலை மருத்துவ அலுவலர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து பரிந்துரைகளை பெற வேண்டும் என,
கொழும்பு வட்டாரக் கல்விப் பணிப்பாளர் பி.ஆர். தேவபந்து அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பாடசாலையில் கண் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்தால் அவர்கள் மற்ற மாணவர்களிடமிருந்து தனித்தனியாக வைக்கப்படுவார்கள் என்றும் வட்டாரக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் ஆறு, ஏழாம் மற்றும் எட்டாம் தர மாணவர்களின் கண் நோய் காரணமாகவே அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
