காதலியுடன் இரயில் புட்போர்டில் அமர்ந்து, பயணம் செய்த இளைஞன் ‘நைன் ஆர்ச் Bridge’ இல் படுகாயம்..

ரயிலின் மிதி பலகை (புட்போர்டில்) பயணம் செய்த இளைஞர் ஒருவர் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்துள்ளார்.

இந்த இளைஞன் தனது காதலியுடன் புகையிரதத்தின் மிதி பலகையில் பயணித்துக்கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொடுவெல 9 வளைவுப் பாலத்தில் ( நைன் ஆர்ச் Bridge) ரயில் ஓடிக் கொண்டிருந்த போது, இளைஞனின் கால் பாலத்தில் மோதி உள்ளது.

இதனால் குறித்த இளைஞன் கீழே விழுந்து அவரது கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த இளைஞன் ரயிலில் எல்ல ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் வெல்லவாய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

Exit mobile version