5 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.

இதன்படி,

இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களின் (425 கிராம்) விலை 35 ரூபாவினால் குறைப்பு, அதன் புதிய விலை 650 ரூபா.

உள்ளூர் டின் மீன்களின் (425 கிராம்) விலை 5 ரூபாவினால் குறைப்பு, அதன் புதிய விலை 545 ரூபா.

ஒரு கிலோ பயறு விலை 20 ரூபாவினால் குறைப்பு, அதன் புதிய விலை 1100 ரூபா.

ஒரு கிலோ நெத்திலி விலை 10 ரூபாவினால் குறைப்பு, அதன் புதிய விலை 1090 ரூபா.

ஒரு கிலோ கொத்தமல்லி 10 ரூபாவினால் குறைப்பு, அதன் புதிய விலை 540 ரூபா.

இந்த புதிய விலை குறைப்புகள் நாளை (19) முதல் அமலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version