கடமை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தந்தை மற்றும் மகன் தாக்கியதாகவும், காயமடைந்த சார்ஜன்ட் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் 3 இல் கடமையாற்றும் களுத்துறை ரெமுனகொட பிரதேசத்தில் வசிக்கும் நபர் என தெரிவிக்கப்படுகிறது.
களுத்துறை, கல்பொத்த சந்திக்கு அருகில் களுத்துறை ரெமுனாகொட பிரதேசத்தில் வசிக்கும் தந்தை மற்றும் மகன் குறித்த நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான சார்ஜன்ட் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
